நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பரும், துபாய் தொழிலதிபருமான பர்ஹான் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் பர்ஹான் தனது நெருங்கிய நண்பர் என்றும் அவருடன் திருமணம் என்பது தவறான தகவல் என்றும் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் தவறானது. பர்ஹான் பிறந்தநாள் அன்று கீர்த்தி வெளியிட்ட புகைப்படத்தை வைத்து ஒரு சில பத்திரிகைகள் அதை திருமணம் வரை கொண்டு சென்று விட்டது. கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் நிச்சயம் கிடையாது. கீர்த்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். அதுவரை கீர்த்தியின் திருமணம் குறித்த வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம்.
நாங்கள் உறுதி செய்யாத எந்த தகவலையும் யாரும் நம்ப வேண்டாம், கீர்த்தி குறித்து பரவும் வதந்தியால் நாங்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறோம். தயவு செய்து எனது மகளை விட்டு விடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.