தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு ஜீனி என பெயரிடப்பட்டு அதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இப்பட விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்படத்தை வேல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். அர்ஜுனன்.ஜே.ஆர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி செட்டி, கல்யாணி, பிரியதர்ஷன், வாமிகா, கவி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகில் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
Also Read
இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.






