லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ‘ இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்தியூதாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நாரெடி” பாடலை விஜயின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ‘லியோ’ கிளைமாக்ஸ் காட்சி குறித்து மிஷ்கின் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது ‘லியோ’ படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும், அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய் இடம் அடி தம்பி ஒன்றுமில்லை என்று கூறினேன். அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்து தான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர் விஜய் அந்த காட்சியை செய்தார் என்று பேசினார். ‘லியோ’ குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது மிஷ்கின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து கூறியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் சிலர் இப்படி உளறிட்டீங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.