தளபதி 68-ல் விஜயுடன் வில்லனாக மோத தயாராகும் பிரபல நடிகர்!?

தளபதி 68

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வெளியான ‘லியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தனது 68 ஆவது படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.

தளபதி-68

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் விஜயுடன் சினேகா, தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த் ,பிரபுதேவா போன்ற பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு காலகட்டத்தில் ஏகப்பட்ட பெண் ரசிகைகளை கொண்ட “வெள்ளிவிழா நாயகன்” என அழைக்கப்பட்ட “மைக்” மோகன் விஜயுடன் மோதும் வில்லனாக நடிக்கிறார்.

மேலும் மற்றொரு வில்லனாக எஸ்.ஜே சூர்யாவையும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top