கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிப்பில். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன்”, கடந்த 1996ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற “இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடத்து வருகிறது.
இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனராம். இப்படத்தை தொடர்ந்து இந்தியன் 3ம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். எஞ்சிய காட்சிகளுக்காக சங்கர், கமலிடம் வெறும் 30 நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்டுள்ளாராம்.

இப்படத்தை தொடர்ந்து நாயகனுக்கு பின்னர் கமல்-மணிரத்னம் கூட்டணி மீண்டும் சுமார் 33. ஆண்டுகளுக்கு பின்னர், கமலின் 234-வது படத்துக்காக இணைகிறது. இப்படத்தின் டீசருகுக்காக முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் 7-ம்தேதி கமலின் பிறந்த நாளில் வெளியாகிறது.