‘இந்தியன் -2’ கிளிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாகிறது

ஷங்கர் இயக்கத்தில் கமலின் இரட்டை வேட நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது இந்தியன்- 2 உருவாகியுள்ளது. தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் கமலும் தனது காட்சிகளுக்கான டப்பிங் முடித்துக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முன்பே இந்தியன் 2 அப்டேட்டை வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 3-ம் தேதி இந்தியன் 2 இன்ட்ரோ கிளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top