நடிகர் அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு ஜூலை முதல் வாரம்அல்லது இரண்டாவது வாரம்வரை அஜர்பைஜான் நாட்டில் நடக்க உள்ளது.

இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் சென்னை திரும்பும் அஜித், உடனடியாக ‘குட் பேட்அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் 15 முதல் 20 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
இப்படத்தில் நடிக்கும் நாயகி,வில்லன் உள்பட முக்கிய நட்சத்திரங்களின் பட்டியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.’குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்தின் தனிப்பட்ட காட்சிகள் மற்றும் அஜித்தின் அறிமுக பாடல் படமாக்கப்பட்டதாகவும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.