சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்ட திருமண வரவேற்பு விழா, ஜகனின் உறவினரான வை. எஸ். சுனில் ரெட்டியின் மகன் சாஹிலின் திருமணத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார். நடிகர் விஜய் பீஜ் நிற பிளேசர் அணிந்து, மணமகனுடன் கலகலப்பாக பழகினார்.
மணமகன் வெள்ளை டக்சிடோவில், மணமகள் லேஸ் கவுனில் அழகாக தோன்றினர். அதேபோல், Y. S. ஜெகன் மோகன் ரெட்டி பாரம்பரிய குர்தா-பைஜாமா அணிந்து கலந்து கொண்டார்.

நடிகர் கமல்ஹாசன் எளிய சூட்டில் வந்திருந்தார். இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த குழு புகைப்படம், சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்தியது.
மேலும் நடிகர் சூர்யா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோரும் கலந்து கொண்டு, அன்புடன் அனைவரையும் கட்டியணைத்து வாழ்த்தினர்.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள், விஜய் மற்றும் ஜகனை “இரண்டு பெரிய மக்கள் தலைவர்கள்” என்று பாராட்டினர்.
விஜயின் TVK அரசியல் பயணம் மற்றும் ஜகனின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் பின்னணியில், இந்த சந்திப்பு மிகுந்த கவனம் பெற்றது.








