கேழ்வரகு
எலும்பு தேய்மானத்தை குறைக்கும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கேழ்வரகு.கேழ்வரகிலுள்ள மாவுச்சத்து மெதுவாக சர்க்கரையாக மாறும் தன்மையுள்ளதால் கேழ்வரகினை உண்பதால் நீரிழிவு நோய் வராமலிருக்கவும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் நார்சத்து அதிகமாக உள்ளதால் ஜீரண சக்தியை அதிகமாக்கவும், இரத்திலுள்ள தேவையில்லாத சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது.

கேழ்வரகில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இச்சத்து வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி, ஆர்த்தரைடீஸ் மற்றும் ஆஸ்டியோ போரஸீஸ் போன்ற நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகிறது.
மேலும் இரத்தசோகை நோய் வராமல் தடுக்க கேழ்வரகிலுள்ள இரும்புச்சத்து மிகவும் பயன்படுகிறது.
100கிராம் கேழ்வரகிலுள்ள ஊட்டச்சத்துக்கள்









