ராகி லட்டு
தேவையான பொருட்கள் :
1.கேழ்வரகு மாவு -500கிராம்
2.நிலக்கடலை -100 கிராம்
3.எள் -100 கிராம்
4.வெல்லம் -200கிராம்

செய்முறை விளக்கம்
கேழ்வரகு மாவில் சிறிதளவு அயோடின் உப்பு மற்றும் தண்ணீ சேர்த்து பிசைந்து பின்பு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்பு அதில் பொடி செய்த நிலக்கடலை, எள், வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை உருட்டி பரிமாறவும்.
அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
1. கலோரி – 344
2. புரதச்சத்து – 7.3கிராம்
3. இரும்புச்சத்து – 3.9கிராம்