மட்டன் தொக்கு செய்முறை – சுவையான மட்டன் தொக்கு எப்படி செய்வது?

மட்டன் தொக்கு

மட்டன் தொக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்

மட்டன் -1/2கிலோ, தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4டேபிள் ஸ்பூன், சீரக தூள் -1 டேபிள் ஸ்பூன்,சோம்பு தூள் – 1 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 4 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், பட்டை -1, கிராம்பு -2, வெங்காயம் -2, பச்சை மிளகாய் -2, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

Mutton Thokku

மட்டன் தொக்கு செய்முறை

மட்டன் தொக்கு செய்வதற்கு முதலில் மட்டனை, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கியும், பச்சை மிளகாயை இரண்டாக கீறியும் வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் பட்டை மற்றும் கிராம்பை போட்டு, பட்டை பொன்னிறமானதும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய்த்தூள், தனியா தூள், சீரக தூள், சோம்பு தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் ஊற வைத்த மட்டனை சேர்த்து 15-20 நிமிடம் நன்றாக கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் குக்கரை மூடி வைக்க வேண்டும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து அரை மணி நேரம் மட்டன் வேரும் வரை கொதிக்க வைத்து கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதன் மேல் கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் டேஸ்ட்டான மட்டன் தொக்கு ரெடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top