உங்கள் உடலை பாதுகாக்க 7 நாட்களுக்கு 7 கஷாயம்

7 நாள் 7 கஷாயம்

திங்கள் கிழமை

வெற்றிலை -4, மிளகு தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும் கபம் சேராது.

செவ்வாய் கிழமை

கடுக்காய் பொடி பனகற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

புதன் கிழமை

தூதுவளை ,கற்பூரவள்ளி ,துளசி இம்மூன்றையும் சம அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது ,அப்படி சளி இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

கஷாயம்

வியாழக்கிழமை

சுக்கு,மிளகு ,சீரகம் ,ஓமம் சேர்த்து வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டால்,ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால்,ஜீரணம் நன்றாக ஆகும்.வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

வெள்ளிக்கிழமை

வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால். ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

கஷாயம்

சனிக்கிழமை

முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை

சுக்கு மல்லி காபி சாப்பிடலாம்

இப்படி பழகி கொண்டால் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமல்லாமல்.எந்த நோயும் அனுகாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top