ஹரியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்

ஹரி இயக்கிய தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் ஏற்கனவே நடித்துள்ளார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஹரி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் மேலும் பல முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இணைகிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்சமின் பிலிம்ஸ் வழங்க ஜி ஸ்டுடியோ உடன் இணைந்து கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார். படக்குழுவினர் கூறும் போது விறுவிறுப்பான திரைக்கதையில் படம் தயாராகிறது. இந்த படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தும். மேலும் பிரம்மாண்ட செலவில் இந்த படம் தயாராக இருக்கிறது.

படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் இது முக்கிய படமாக இருக்கும். சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பரபரப்பான கதையும் கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்றனர். ஹரியின் முந்தைய படங்களை போல் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த குடும்பப் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top