விஜயின் லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பிலும் தனக்கிருக்கும் ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். அடுத்ததாக லோகேஷ், ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள நிலையில், அப்படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்திலும் லோகேஷ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இப் படத்தில் இவருடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் நடிக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தின் கதை. திரைக்கதை மற்றும் வசனத்தை லோகேஷ் கனகராஜே எழுதவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
இப் படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.






