நடிகர் இயக்குனர் விஜய் ஆண்டனி, தற்போது அவரே இயக்கி, நடித்து, ‘பிச்சைக்காரன்-2’ திரைப்படம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், இப்படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறியது எதுவும் திட்டமிடப்படவில்லை. எல்லாம் தற்செயலாகத் தான் நடந்தது.
நான் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கான கதையை எழுதி அதனை இயக்குனர் சசியிடம் கொண்டு போய் கொடுத்தேன். ஆனால் அந்த சமயத்தில் அவர்வேறு 2 படங்களில் பிஸியாக இருந்தார். அதன் பின்னர் நான் வேறு சில இயக்குனர்களை அணுகினேன். ஆனால் எதுவும் சரிவரவில்லை உடளே நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்து, அதன்படி இயக்குனராக மாறிவிட்டேன்.
இப்படம் கடந்த 2016ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் தொடர்ச்சி அல்ல. ‘பிச்சைக்காரன்’ படம் தாய்-மகன்: உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் ‘பிச்சைக்காரன்-2’ படம் அண்ணான் தங்கை உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாக எடுக்கப்பட்டுள்ளது என்றவர், தனக்கு படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து கூறுகையில் பொதுவாக ஆக்சன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் போது விபத்துகள் அதிகம் நடப்பது இயல்பு தான், ஆனால் ஒரு காதல் பாடல் படப்பிடிப்பின் போது நான் விபத்துக்குள்ளாளேன். கடலில் ‘ஜெட் ஸ்கீயிங்’ செய்யும் போது எனது மோட்டார் படகு, ஒளிப்பதிவாளர்