கல்பாத்தி எஸ்.அகோரமின் AGS என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் தளபதி 68, வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான AGS Entertainment -ன் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய் உடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற உள்ளார்.
பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக அவரது 68 படத்திற்காக AGS Entertainment இணைகிறது. தளபதி 68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது AGS-ன் 25வது படைப்பு என்பதோடு, இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள AGS Entertainment தளபதி 68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
AGS, தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக யுவன்சங்கர்ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அனைத்து பார்வையாளர்களும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக தளபதி 68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர்.
நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் AGS Entertainment தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.
20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது ஆச்சரியமான செய்தி.கடைசியாக விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.