Alovera Jel :கற்றாழை ஜெல் நீங்களே வீட்டில் செய்யலாம் !

Alovera Jel | கற்றாழை ஜெல்

தயாரிப்பு முறை

கற்றாழைச் செடியில் இருந்து ஒவ்வொரு மடல் அனாக வெட்டி எடுக்கவும். அவற்றில் இருந்து மஞ்சள் நிற திரவும் வெளியேறும். இதில் ‘அலாயின் காம்பவுண்டு’ எனும் நச்சுப்பொருள் இருக்கும். அதை வெளியேற்றுவதற்கு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கற்றாழை மடல்களை அதில் போடவும்.

அரை மணி நேரம் கழித்து மஞ்சள் நிற திரவம் முழுவதும் வெளியேறி தண்ணீரில் கலந்திருக்கும். பிறகு அந்த தண்ணீரை வெளியே ஊற்றிவிட்டு, மீண்டும் பாத் திரத்தில் தண்ணீர் நிரப்பி மீண்டும் கற்றாழை மடல்களை அந்த தண்ணீரில் போடவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரை ஊற்றி விட்டு, கற்றாழை மடல்களை சுத்தமாகக் கழுவிக்கொள்ளவும்.

பின்னர் மடல்களின் அடிப்பகுதியில் இருந்து ஒரு அங்குல அளவு மற்றும் இரண்டு ஓரப்பகுதிகளையும் வெட்டி நீக்கவும். அடுத்ததாக மடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

Alovera Jel

இப்போது அந்த துண்டுகளை குறுக்காக வெட்டினால் நடுவில் ஜெல் போன்ற சதைப்புற்று இருக்கும். அதை மட்டும் ஸ்பூனால் கரண்டி தனியாக எடுக்கவும்.

இவ்வாறு சேமித்த ஜெல் முழுவதையும், ஒரு மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும் இப்போது நுரையுடன் கூடிய கெட்டியான திரவம் கிடைக்கும்.

செய்முறை :1

இதை ஐஸ் டிரேக்களில் ஊற்றி, பிரீஸரில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றிக்கொள்ளவும், தேவைப்படும் இப்போது வெளியில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் உங்கள் தேவையை பொருத்து ஒரு வருட காலம் வரை இதை உபயோகப்படுத்த முடியும்.

செய்முறை :2

தேவையான பொருட்கள்:

தயாரித்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல் -1 லிட்டர்

வைட்டமின் சி மாத்திரை – 8 மில்லிகிராம்

வைட்டமின் சி மாத்திரையை நன்றாக தூளாக்கிக் கொள்ளவும். அதை கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும், இதனை 6 முதல் 8 மாதங்கள் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ள லாம்.

செய்முறை 3:

தேவையான பொருட்கள்:

தயாரித்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல் – 1 கப்
டிஸ்டில்டு வாட்டர் – 1 1/4 கப்

ஜெலட்டின் – 31/4டீஸ்பூன்

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ஜெலட்டின் கலந்து ஆறவைக்கவும். பிறகு அதனுடன் கற்றாழை ஜெல்லை கலக்கவும். இதை குளிர்சாதனப் பெட்டி யில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top