கண் நோய் மற்றும் பல்வலி ,ஆண்மை குறைவை சரி செய்யும் செவ்வாழையின் அற்புத பயன்கள்

செவ்வாழை

செவ்வாழை மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. இதை பலரும் அறியாமலேயே உண்டு பயன்படுகின்றனர். இதை பலரும் அரிய அளவிலே உட்கொள்கின்றனர். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் நோய்களை குணமாக்கும். மேலும் செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்சிடென்ட் காணப்படுகிறது.

இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல் அசைவு போன்ற பல வகையான பல் நோய்களையும் குணமாக்கும் வல்லமை கொண்டது செவ்வாழை. பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட உறுதியாக நிற்கும்.

சரும நோய்களான சொறி, சிரங்கு, தோளில் வெடிப்பு போன்றவற்றுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணமாக இருக்கிறது. சொறி அல்லது சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.

செவ்வாழை

நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். தொற்றுநோய் கிருமிகளை கொள்ளும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்திற்கு உண்டு

வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும் என்பது உறுதி. தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படும் அபாயம் நீக்கப்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். மேலும் செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறு போன்றவற்றை சரி செய்யும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேலைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top