பிரண்ட்ஸ் பிக்சர் தயாரிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்தப் படத்திற்கு கனா படத்தின் இசையமைப்பாளரான திபுன் நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குனரான மனு ஆனந்த் ஏற்கனவே எஃப் ஐ ஆர்(FIR) என்ற படத்தை இயக்கி அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படமும் வெற்றி படமாக அமையும் என்று ஆர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தத் திரைப்படம் 2024-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு ,கன்னடம்,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.