நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘கோட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, தாய்லாந்து, இலங்கை ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடந்தது.இப்படம் டைம் டிராவலை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது கோட் படத்தின் கதை பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது கடந்த 2004ல் ரஷ்யாவின் மாஸ்கோ நகர மெட்ரோவில் ஒரு தீவிரவாதி உடம்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க வைத்து நடத்திய தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.இந்த அதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்களை பிடிப்பதுதான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான “சின்ன சின்ன கண்கள்” பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் மற்றும் மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இணைந்து பாடிய “சின்ன
சின்ன கண்கள்” எனும் குடும்ப பாடல் வீடியோ கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி உள்ளது.
மறைந்த பின்னணி பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணியின் குரலை ‘ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா கொண்டு வந்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.கபிலன் வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல் மெலோடி பாடலாக அமைந்துள்ளது.