கேப்டன் மில்லர்
அருண் மாதேஸ்வரன், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் சில முக்கியமான காட்சிகள் தென்காசி மாவட்டம் மத்தலம் பாறையிலிருந்து செல்லும் வழியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்ட வருகிறது..
இந்த நிலையில் இப்பகுதியில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட காட்சிகளின் படப்பிடிப்பால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்ததாகவும் கூறினார்.அப்பகுதியில் புகை சூழ்ந்த நிலையில் மத்தலம் பாறை கிராமத்திற்கு அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின்( KMDR) பாதுகாப்பு மண்டலத்தில் படக்குழுவினர் சட்டவிரோதமாக செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து அதன் கறைகளை சேதப்படுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், முறைப்படி அனுமதி பெறவில்லை என்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் பறந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார்
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க பட குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இதை அடுத்து இப்போது முறைப்படி அனுமதி பெற்ற பின்னர் மீண்டும் சூட்டிங் பணியில் தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.