விஜய் நடிப்பில் தற்போது ‘கோட்’ படம் உருவாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது எங்கு நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக நிலவி வருகிறது.
இசை வெளியீட்டு விழாவை விட, அந்த விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கப் போவ தில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாதம் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதால் ஒரே மாதத்தில் இரண்டு விழா நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் ‘கோட்’ பட இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக வும் கூறப்படுகிறது.