மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கும் என்றும், இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷா, அர்ஜூன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோர் அஜித்துடன் இணைவார்கள் என்கிறது படக்குழு.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தை நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஜித் அஜர் பைஜானில் அதிவேகமாக கார் ரேஸ் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோ அஜித்தின் ரசிகர்களால் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.