32வது வயதில் 2-ம் திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை !லிப் லாக் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார் !!

அமலாபால்

நடிகை அமலாபால் தனது 32 வது பிறந்தநாளில் காதலைச் சொன்ன ஆண் நண்பருக்கு ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்துஅமலாபாலின்2 வதுதிருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

கேரளாவை சேர்ந்த நடிகை அமலாபால் 2010- ஆம் ஆண்டு வெளியானசிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 2011ஆம்ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அமலாபால்

அதன் பின்னர் தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்ட தாரி, பசங்க 2, அம்மாகணக்கு, வேலையில்லாபட் டதாரி 2, திருட்டுப்பயலே 2,பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் கடாவர் என்ற வெப்சீரிஸிலும் அமலா பால் நடித்திருக்கிறார். இந்நிலையில், அமலா பால் இயக்குநர் ஏ. எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறு பாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் நடிகை அமலாபால் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

இப்படியான நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பர் ஜனாதேசாய் என்பவர் அமலாபாலிடம் காதலை சொல்லும் (லவ்ப்ரபோஸ்) வீடியோவை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வீடியோவில் அமலாபால் முன்பு சினிமா கதாநாயகர்கள் பாணியில் நட னம் ஆடி,ஜனாதேசாய் தனது காதலை மண்டியிட்டு சொல்வதும் அதை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவரை இறுகத் தழுவிக் கொண்டு பலமுறை ‘லிப்லாக்’ முத்தம் கொடுப்பதும், இதையடுத்து ஜனா தேசாய் அவரது விரலில் மோதிரம் மாட்டிவிடும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளது

இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ் வீடியோவில் தனது காதலை வெளிப்படையாக அமலா பால் அறிவித்துள்ளார். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top