இந்திய ட்ரைவிங் லைசென்ஸ் இருந்தால் இந்த நாடுகளில் வாகனம் ஓட்டலாம் !

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அங்குள்ள உள்ளூர் போக்குவரத்து வாகனங்களை தான் நாட வேண்டி இருக்கும். அங்கு வாடகைக்கு கார் புக்கிங் செய்து விரும்பிய இடங்களை சுற்றி பார்க்க நேரிடும். கார் ஓட்டியே பழக்கப்பட்டவர்கள் அங்கும் தாங்களே கார் ஓட்டி செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் ஆசயை பூர்த்தி செய்யவும் வகையில் சில நாடுகள் சர்வதேச ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்ட அனுமதிக்கின்றன. அத்தகைய நாடுகளில் முக்கியமானவை உங்கள் பார்வைக்கு…!

அமெரிக்கா

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

அங்குள்ள பெரும்பாலான மாகாணங்கள் இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் ஒரு வருடம் வரை வாடகை கார் ஓட்ட அனுமதிக்கின்றன. அந்த ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகாமலும், ஆங்கிலத்திலும் இருக்க வேண்டியது முக்கியமானது. அதே வேளையில் ஐ-94 என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

 ஆஸ்திரேலியா

இந்திய ஓட்டுனர் உரிமம் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தால், அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் மூன்று மாதம் வரை வாகன வாகனம் ஓட்டிக் கொள்ளலாம். இந்தியாவைப் போலவே தான் வாகனம் ஓட்ட வேண்டி இருக்கும். அதனால் சீராக வாகனம் இயக்க முடியும்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ட்ரைவிங் லைசென்ஸ்

ஜெர்மனி

இங்கு இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் 6 மாதங்கள் வாகனம் ஓட்டலாம். ஜெர்மனியர்கள் நம் பழக்கத்திலிருந்து மாறுபட்டு வாகனம் ஓட்டும் வழக்கம் கொண்டவர்கள் என்பதால் அங்குள்ள போக்குவரத்து விதிகளை பின்பற்ற மறக்காதீர்கள். சில பகுதிகளில் ஜெர்மன் மொழிபெயர்க்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் தேவைப்படலாம். சர்வதேச ஓட்டுனர் உரிம அனுமதியை வைத்திருப்பதும் நல்லது.

இங்கிலாந்து

இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்டலாம். இருப்பினும் அங்கு குறிப்பிட்ட வகை வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும்.

சுவிட்சர்லாந்து

இந்திய ஓட்டுநர் உரிமத்துடன் சுவிட்சர்லாந்தில் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்டலாம். ஒரே ஒரு நிபந்தனை தான் ஓட்டுனர் உரிமம் ஆங்கிலத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தென்னாப்பிரிக்கா

உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்திலும் இருந்தால் தென்னாப்பிரிக்காவில் இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் வாகனம் ஓட்டலாம். இருப்பினும் சில வாடகை ஏஜென்சி வாகனங்களை ஓட்டுவதற்கு சர்வதேச ஓட்டுனர் உரிமம் தேவைப்படலாம்.

ஸ்வீடன்

இந்த நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் ஆங்கிலம், சுவீடிஷ், ஜெர்மன், பிரஞ்சு, நார்வேஜியா மொழியில் இருக்க வேண்டும். அதுவும் சரியான அடையாள அட்டையுடன் கூடிய தகவல்கள் கொண்டிருக்க வேண்டும். அங்கு அந்த ஓட்டுனர் உரிமம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

ட்ரைவிங் லைசென்ஸ்

சிங்கப்பூர்

இங்கு இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் ஒரு வருடம் வரை வாகனம் ஓட்டலாம். ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

ஸ்பெயின்

அங்கு தங்குவதற்கான இடத்தை பதிவு செய்த பிறகு 6 மாதங்கள் வரை ஸ்பெயினில் வாகனம் ஓட்டலாம். உங்கள் ஓட்டுனர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையும் உடன் இருக்க வேண்டும்.

கனடா

இந்திய ஓட்டுனர் உரிமத்துடன் கனடாவில் 60 நாட்களுக்கு வாகனம் ஓட்டலாம். பின்னர் கனடிய ஓட்டுநர் உரிமத்தை பெறலாம். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி சாலையின் வலது புறத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மலேசியா, நியூசிலாந்து, ஹாங்காங், பின்லாந்து, பூடான், பிரான்ஸ், நார்வே உட்பட பல்வேறு நாடுகளும் இந்திய ஓட்டுனர் உரிமத்தை ஏற்றுக் கொள்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top