சிறுதானியங்களின் மகத்துவம்
அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியத்தில் புரதம், நார்ச்சத்து, நியாசின், தயமின் மற்றும் ரிப்போபிளோவின் ஆகிய வைட்டமின்கள் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் சிறுதானியங்களில் உள்ள பைடிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதனால் புற்றுநோயினை வெகுவாக குறைக்கின்றது.
உதாரணமாக 100 கிராம் சிறுதானியத்தில் அதிகபட்சமாக 12.5 கிராம் புரதச்சத்து உள்ளது. ஆனால் அரிசியில் 7.9 கிராம் மட்டுமே உள்ளது. இதேபோன்று அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்ச்சத்து (2.0கிராம்-13.06கிராம் ) இரும்புச்சத்து (1.7மி.கி -1 8.6மி.கி) மற்றும் கால்சியம் (17 மி. கி-350 மி.கி)

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு
- சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கின்றன
- பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகின்றன
- உடல் நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன
- உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன
- சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மிட்நீசியம் தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது
- சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன
- சிறுதானியங்களில் உள்ள நியாசின்(வைட்டமின் B3 ) ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேருவதை குறைக்கிறது
- அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை(Type ll அதவாது இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை
- சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது
- ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றன
- சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது
- அதிக அளவு நார் சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன
- உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும் பொழுது உடல் எடை சீராக குறைகிறது
- பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் பயிற்சி அமிலம் ஆகியவை சிறுதானியங்களில் காணப்படுவதால் சிறு தானியங்களை உட்கொள்வோருக்கு நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன அதுபோலவே பைட்டோ புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றது எலும்பு வளர்ச்சிக்கும் நாம் சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணை புரிகின்றன