அஜீத்குமார்
அஜித் குமார் ஷாலினி தம்பதிக்கு மகள் அனொஷ்கா, மகன் ஆத்விக் இருக்கின்றனர். இதில் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். அதற்கான சிறப்பு பயிற்சி பெற்றுள்ள அவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்று வருகிறார். மகள்அ னொஷ்காவுக்கு தற்போது 15 வயதாகிறது பள்ளியில் உயர் கல்வி படித்து வருகிறார். ஷாலினி தனது சமூக வலைதள பக்கத்தில் அனொஷ்காவின் படத்தை அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

சில காலம் இடைவெளி விட்டிருந்த அவர் தற்பொழுது ஒரு விழாவில் அனொஷ்காவுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அனொஷ்காவுடன் ஹீரோயின் போல தோற்றமளிக்கிறார். இளமை காலத்தில் இருந்த ஷாலினியின் சாயலிலும் அவர் காணப்படுகிறார். அனொஷ்காவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருப்பதாகவும் அதற்கு ஷாலினி ஆதரவு தருவதாகவும் இது குறித்த அஜித்குமார் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அனொஷ்கா சினிமாவில் நடிக்க வந்தாலும் அவர் 18 வயதுக்கு மேல் தான் வருவார் என்று சொல்கின்றனர். ஆனால் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.