கம்பு புட்டு
தேவையான பொருட்கள்
1.கம்பு மாவு – 2கப்
2. வெல்லம் – 1 கப்
3. உப்பு – தேவையான அளவு
4. தேங்காய் – 1/2மூடி
5. நெய் – 1ஸ்பூன்
6. ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்

செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கம்பு மாவுடன் தேவையான உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிரட்டவும்.பின் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வைக்கவும்.வெந்ததும் எடுத்து கட்டியாக இருந்தால் மிக்ஸியில் போட்டு திருப்பவும்.
அடுத்து தேங்காயை துருவி வைக்கவும்.அடுத்தபடியகா வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைந்ததும் வடிகட்டவும்.பின் அந்த வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இறுதியாக வேகவைத்த கம்புமாவில், தேங்காய்த் துருவல், வெல்லக்கரைச்சல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டிப் பரிமாறவும். மிகச் சுவையான கம்பு புட்டு தயார்.