ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தை பெரும் பொருட்செலவில் ‘சிறுத்தை சிவா’ இயக்கி வ்ருகிறார்.இந்த திரைப்படம் 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
மேலும் இது ஆங்கில பதிப்பில் வெளியாகும் முதல் தென்னிந்திய படம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.இதனிடையே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெறுவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டன.இறுதியில் அமேசான் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது.
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை இன்னும் விற்கபடவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.