கேழ்வரகு பால் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
1.கேழ்வரகு மாவு – 1 கப்
2.பால் – 2 கப்
3.அரிசி மாவு – 1/4கப்
4.சக்கரை – 1/2 கப்
5.நெய் – 4 ஸ்பூன்
6.தேங்காய் துருவல் – 1/4 கப்
7.நல்லெண்ணெய் – 3 டீ ஸ்பூன்
8.ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதித்ததும், கோதுமை மாவை சேர்த்து நன்கு கிளறவும். அரிசி மாவையும் சேர்த்துக் கிளறி கை பொறுக்கும் சூடு வந்ததும் இறக்கவும்.
கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும். அவற்றை இட்டி தட்டில் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் கொதிக்கும்போது சிட்டிகை உப்பும் சேர்க்கலாம்.
நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி, அதை மிக்ஸியில் ஒரு சுற்றிசுற்றி எடுக்கவும். பாலைக் கொதிக்க வைத்து கொதிக்கும் பாலில் அரைத்து தேங்காய்த் துருவலைப் போடவும். அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். கொதிக்கும் இந்த பால்-தேங்காய் கலவையில் வெந்த கொழுக்கட்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.








