வரகு அரிசி புலாவ்
தேவையானவை:
1.வரகரிசி-2 கிண்ணம்
2.பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு- 2 கிண்ணம் (நறுக்கியது)
கிரேவி
1.தக்காளி-1
2.வெங்காயம்-1
3.பச்சை மிளகாய் -2
4.இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
5.கொத்துமல்லி-சிறிதளவு
6.கரம் மசாலா பவுடர்- 1 தேக்கரண்டி
7.மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
8.உப்பு – தேவையான அளவு
9.எண்ணெய், நெய்- கால் கிண்ணம்
தாளிதம் செய்யா
ஏலக்காய், கிராம்பு,பட்டை, சீரகம்,மிளகு சிறிதளவு

செய்முறை:
வரகரிசியை கழுவி, ஒன்றுக்கு 1 கிண்ணம் வீதம் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடிக்கவும், தக்காளி, வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, கொத்துமல்லி, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சீரகம். கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு தாளிதம் செய்து அரைத்த மசாலா விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். கெட்டிப்பட்டவுடன் உதிரியாக வடித்த வரகரிசி சாதத்துடன் கலந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
வரகு அரிசி கேரட் சாதம்
தேவையான பொருட்கள்
1.கேரட் – 4
2.உதிரியாக வடித்த வரகரசி சாதம்- 2 கிண்ணம்
3.வெங்காயம்-2
4.கடுகு – 1 தேக்கரண்டி
5.எண்ணெய் – 6 தேக்கரண்டி
6.பச்சை மிளகாய்-4
7.முந்திரி – தேவையான அளவு
8.கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாண லியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்தவுடன் நறுக்கிய வெங்க யம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடிவைத்து வேக விடவும் கேரட் நன் றாக வெந்தவுடன் வேக வைத்த வரகரி சியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 1நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.
வரகு அரிசி அதிரசம்
தேவையான பொருட்கள்
1.வரகரிசி – 1 கிண்ணம்.
2.வெல்லம் – 3/4 கிண்ணம்
3.நெய் – 1/4 ஸ்பூன்
4.எள் – சிறிதளவு
5.தயிர் – 2ஸ்பூன்
6.ஏலக்காய் தூள் – 1/2ஸ்பூன்
7.எண்ணை – தேவையான அளவு
செய்முறை
வரகு அரிசியை ஊறவைத்து சுத்தம் செய்து, வடித்து உலர வைக்கவும். வாணலியில் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, தக்காளிப்பழப் பாகு பதத்தில் எடுத்து இறக்கி வைத்து. அரைத்த மாவு, எள், நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு சிறு உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் சற்று கனமாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வரகு அரிசி தேங்காய் ரொட்டி
தேவையானவை:
1.வரகசிரி மாவு 2 கிண்ணம்
2.கொத்துமல்லித் தழை- 1 கிண்ணம் (நறுக்கியது)
3.தேங்காய்த் துண்டுகள்- கால் கிண்ணம் (நறுக்கியது)
4.நறுக்கிய வெங்காயம் – கால் கிண்ணம்
5.சீரகம்- 1 தேக்கரண்டி
6.உப்பு எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
வாயகன்ற பாத்திரத்தில் வரகரிசி மாவு கொத்துமல்லித் தழை, தேங்காய்த் துண்டுகள், வெங்காயம். உப்பு, சீரகம் சேர்த்து இளஞ்சூடான தண்ணீர் சேர்த்து கலந்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
எலுமிச்சம் பழம் அளவில் உருண்டையாக உருட்டி. வாழை இலையால் சற்று கனமாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். சுவையான இஞ்சி, புளி, சட்னியுடன் சாப்பிட மிகவும். நன்றாக இருக்கும்.








