மிளகு தண்ணி சூப்
தேவையான பொருட்கள்
1.வெங்காயம் – 1
2.தக்காளி -3
3.இஞ்சி – ஒரு துண்டு
4.பூண்டு -4 பல்
5.மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
6.எலுமிச்சம்பழச் சாறு -ஒரு டேபிள் ஸ்பூன்
7.தேங்காய்ப்பால் – ஒரு கப்
8.மல்லித்தழை -சிறிது
9.உப்பு – தேவைக்கேற்ப
10.எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
11.துவரம் பருப்பு – அரை கப்
12.தனியா – 2 டீஸ்பூன்
13.சீரகம் – ஒரு டீஸ்பூன்
14.சோம்பு -கால் டீஸ்பூன்
15.வெந்தயம் – கால் டேபிள் ஸ்பூன்
16.பட்டை – ஒரு துண்டு
17.மிளகு – ஒரு டீஸ்பூன்

செய்முறை
கடைசியாகக் குறிப்பிடும் 7 பொருட்களை ஒன்றாக நன்கு வறுத்துப் பொடிக்கவும். வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
பச்சை மிளகாயைச் கீறவும். எண்ணெயைக் காயவைத்து மேலே சொன்னவற்றை ஒன்றாகப் போட்டு வதக்கவும். அத்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்த பொடியையும் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி ஆறவிடுங்கள்.
அதை அரைத்து வடிகட்டி, பச்சை மிளகாய் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கி எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.
பயன்
இருமல், சளி, தலைவலி, சைனஸ் தொந்தரவு, மாதவிடாய் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.








