மார்கழி திங்கள்
வெண்ணிலா புரொடக்ஷன் தயாரிப்பில்,மனோஜ் கே பாரதிராஜா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், ஷியாம் செல்வன், ரக்ஷனா, பாரதிராஜா உள்ளிட்ட மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மார்கழி திங்கள்‘

தாத்தா பாரதிராஜா அரவணைப்பில் வளர்ந்து வரும் நாயகி ரக்ஷனா பள்ளியில் நன்றாக படித்து வருகிறார். அதே பள்ளியில் நாயகன் ஷியாம் செல்வன் சேர்ந்த பிறகு படிப்பில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. நாளடைவில் அது காதலாக மாறுகிறது. தன் காதலை தாத்தா பாரதிராஜாவிடம் ரக்ஷனா சொல்ல, அவரோ படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம். நீங்கள் படித்து முடித்த பிறகு உங்கள் காதலை சேர்த்துவைக்கிறேன்என்று கூறி படிக்க வைக்கிறார்.

இருவரும் பேசிக் கொள்ளாமல் பிரிந்து படிக்க செல்கிறார்கள்.ஒரு கட்டத்தில் நாயகி படிப்பு முடித்து விட்டு தன் காதலனை தேடுகிறார். ஆனால், அவர் எங்கும் கிடைக்கவில்லை. இறுதியில் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஷியாம் செல்வன் திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி ரக்ஷனா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். பாரதிராஜா அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். சுசீந்திரன் வில்லனாக மிரட்டியுள்ளார்.
காதல், ஆணவ கொலையை மையமாக வைத்து படத்தை இயக்கி வித்தியாசமான இறுதிக்காட்சியை கொடுத்துள்ளார் மனோஜ் கே பாரதிராஜா. முயற்ச்சிக்கு பாராட்டலாம். வாஞ்சி நாதன் முருகேசன் ஒளிப்பதிவு, இசைஞானி
இளையராஜா இசை படத்திற்கு பெரிய பலம்.

மொத்தத்தில் ‘மார்கழி திங்கள்‘ காதல். பார்க்கலாம்.
சினி உலகம் ரேட்டிங் : ★★★