எக்ஸ். பி. பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்துநடிக்கும் புதிய படம்,நேசிப்பாயா’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு நாயகன் ஆகாஷ் முரளியை அறிமுகப்படுத்தி பேசி யதாவது, நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர்.
நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது
ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை.
இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்”. இவ்வாறு அவர் பேசினார்.