ஓட்ஸ் சூப்
தேவையான பொருட்கள்
Also Read
- ஓட்ஸ்- ஒரு கைப்பிடி அளவு
- பால் – ஒரு கப்
- பூண்டு – 3 பல் (விரும்பினால்)
- மிளகுத்தூள்- 1/2 ஸ்பூன்
- வெண்ணெய் – 2ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை
பூண்டுப் பல்லைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெண்ணெயை உருக்கி,பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் ஓட்ஸைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் வேகவிட்டு பால், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும் வெண்ணெய் சேர்க்காமலும் சாப்பிடலாம்.
பயன்கள்
கொழுப்பு சத்து உள்ளவர்கள் பரபரப்பான வாழ்க்கை உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் ‘ஓட்ஸ்’ அருந்துவது மிகவும் நல்லது.
நார்ச்சத்து மிக்கது இதை காலை வேளைகளில் பயன்படுத்தலாம்.








