கேழ்வரகு இட்லி
தேவையான பொருட்கள் :
1.கேழ்வரகு மாவு -1 கப்
Also Read
2.உளுத்தம்பருப்பு -1 மேஜை கரண்டி
3.வெந்தயம் -1/2 தேக்கரண்டி
4.உப்பு -தேவையான அளவு

செய்முறை :
ஒரு மணி நேரம் உளுந்து வெந்தயம் இரண்டையும் ஊற வைத்து நன்கு அரைக்கவும்.
கேழ்வரகு மாவு உப்பு சேர்த்து ,இவற்றுடன் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவு புளிக்க வைக்கவும்.
மறுநாள் இட்லி செய்தால் பூப்போன்ற இட்லி கிடைக்கும்.சாம்பார் சட்னியுடன் பரிமாறலாம்.








