ஜெயிலர்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட் இப்படத்தின் டத்தில் உள்ள நிலையில், இப்படம் சுதந்திர தின விடுமுறையையொட்டி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரஜினியின் ஜெயிலா திரைப்படம் மாவீரன் படத்துக்கு ஒரு நாள் முன்னதாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரஜினி, சிவகார்த்திகேயன். படங்கள் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகியுள்ளது.