‘மிஷன் சாப்டர்-1’
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில்,
ஜி.வி பிரகாஷ்குமார் இசையில், அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘மிஷன் சாப்டர்-1’. கோயம்பதூரில் வசித்து வரும் அருண்விஜய் தன் மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்ல நேர்கிறது. இருக்கும் கார், நிலங்களை எல்லாம் விற்று மருத்துவ செலவிற்கான மொத்த பணத்தையும் லண்டனிற்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாது என்பதால் ஒருவரிடம் கொடுத்து லண்டனில் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
அந்த நபர் அருண் விஜய்யிடம் ரூபாய் நோட்டு ஒன்று கொடுக்கிறார். இதன் மூலம்தான் லண்டனில் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.இதையடுத்து லண்டனுக்கு விஜய்க்கு செல்லும் நர்சாக பணிபுரியும் நிமிஷா சஜயன் உதவி செய்கிறார். இந்த நேரத்தில் ரூபாய் நோட்டு இருக்கும் பர்ஸை ஒருவன் திருடிவிடுகிறான். இதை மீட்கும் முயற்சியில் இருக்கும் அருண் விஜய்யை போலீசார் பிடிக்கின்றனர்.
மற்றொருபுறம் மாநாட்டை சீர்குலைக்க திட்டமிட்ட தீவிரவாதிகள் கும்பலில் ஒருவன் அருண் விஜய்யை பார்த்துவிட்டு பதறி போய் தன் தலைவனுக்கு போன் செய்யும் நேரம் அவன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.இறுதியில் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அருண்விஜய் கடின உழைப்பை கொடுத்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். எமி ஜாக்சன், நிமிஷாசஜயன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் ஆங்கில படத்திற்கு இணையாக கொடுக்க முயற்ச்சித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். ஜி.வி. பிரகாஷ் இசை, சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் ‘மிஷன் சாப்டர்-1’ பார்க்கலாம்.
Cinemaulagam Rating : ★★★