மும்பையில் நடைபெற்ற RSS நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பை வோர்லியில் உள்ள நேரு சென்டர் அரங்கில் நடைபெற்ற ‘மும்பை வியாக்யான்மாலா’ நிகழ்ச்சித் தொடரின் முதல் நாளில் கலந்து கொண்டார்.

அங்கு RSS தலைவர் மோகன் பகவத், இந்தியர்களை ஒன்றிணைக்கும் கலாச்சார அடையாளமாக ‘இந்து’ என்ற சொல்லை விளக்கி உரையாற்றினார். மேலும், சமூக சேவை மற்றும் கல்வி மூலம் நாட்டை உருவாக்குவதில் RSS அமைப்பின் பங்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

சல்மான் கான்

இந்த நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் ரன்பீர் கபூர் மற்றும் ஹேமா மாலினியும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சல்மான் கான் பங்கேற்றது குறித்து சமூக வலைதளங்களில் பலர் பாராட்டியும், சிலர் மத ரீதியான கோணத்தில் விமர்சித்தும் கருத்து தெரிவித்தனர்.

1925-ல் தொடங்கப்பட்ட RSS அமைப்பு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் இந்த நிகழ்வில் தனது பங்கேற்பு குறித்து சல்மான் கான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top