Samayal Kurippugal | சமையல் குறிப்புகள்
- ஒரு தேக்கரண்டி வினிகரை சேர்த்து முட்டையை வேக வைத்தால் முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
- பால் பாத்திரத்தை தண்ணீரில் நனைத்து விட்டு பின்னர் பாலை காய்ச்சினால் பால் பாத்திரத்தின் அடிபிடிப்பதை தவிர்க்கலாம்.
- பால் காய்ச்சும் போது அதனுடன் இரண்டு ஏலக்காயை சேர்த்து காய்ச்சினால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
- வேகவைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கு கெடாமல் இருப்பதற்கு சில துளிகள் வினிகரை தெளித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- கீரை கடையல் செய்யும்போது கீரையின் கலர் மாறாமல் இருக்க சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.
- பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
- முட்டை தோல் எளிதாக உரிக்க முட்டையை வேக வைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- பால் பாயாசம் செய்யும் போது சிறிதளவு பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
- முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
- முருங்கைக்காய் அதிகமாக இருந்தால் துண்டுகளாக நறுக்கி கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
- காய்கறிகளை வாங்கி வந்ததும் தண்ணீரில் அலசி விட்டு பிறகு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தால் அவை வெகு நாட்கள் வரை பசுமையாக இருக்கும்.

- பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு ரவையை லேசாக வறுத்து, பூரி மாவுடன் சேர்த்து பிசைந்தால் பூரி மொறு மொறு என்று இருக்கும்.
- அப்பளத்தை உளுத்தம் பருப்பில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.
- தேங்காய் துவையலில் தனியாவையும் சிறிது சேர்த்து வறுத்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
- வாடிய கொத்தமல்லி தலையை வெதுவெதுப்பான வெந்நீரில் போட்டு எடுத்தால் புத்தம் புதிதாகிவிடும்.
- கருவேப்பிலை கொத்தாக ஈரம் போக காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்து பவுடர் ஆக்கிக் கொண்டு உபயோகித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
- கத்தரிக்காய் கூட்டு பொரியல் எது செய்தாலும் சிறிதளவு கடலைமாவை தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் மனம் கமகமவென்று இருக்கும்.
- பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் பட்டாணி ஒன்றோடு ஒன்று ஒட்டாது நிறமும் மங்காது.
- கலவை சாதம் செய்ய சாதம் சூடாக இருக்கும் போதே தேவையான உப்பும் என்னையும் கலந்து பிசறி விடவும், அப்போதுதான் உப்பு சமமாக பரவி இருக்கும்.
- சேனைக்கிழங்கை நன்றாக வேக வைத்து உருளைக்கிழங்கு போண்டா மாறி செய்யலாம் டேஸ்ட்டாக இருக்கும் வித்தியாசம் ஏதும் தெரியாது.
- வெண்டைக்காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கி வழவழப்பு போகும் வரை எண்ணையில் வதக்கி கடைசியில் இறக்கும் போது, உப்பு காரம் போட்டு பிசறிவிட்டு இறக்குங்கள் நல்ல மொறு மொறுப்புடன் இருக்கும்.
- எந்த வகை ஊறுகாய் என்றாலும் அதில் கடுகு எண்ணெய் சேர்த்தால் கெட்டுப்போகாது.

- ஊறுகாய் ஜாடியில் கொதிக்கும் எண்ணெயில் நனைந்த துணியால் உட்புறத்தை துடைத்துவிட்டு பிறகு ஊறுகாயை போட்டு வைத்தால் பூசணம் பிடிக்காது.
- ஊறுகாய்க்கு தாளிக்கும் போது சிறிது எள்ளை வறுத்து பொடித்து சேர்த்தால் மனம் கூடும் கெட்டும் போகாது.
- ஊறுகாய்களை கண்ணாடி பாட்டில், பீங்கான் ஜாடி, கல் சட்டிகளில் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். எவர்சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஊறுகாயும் கெட்டு ,பாத்திரங்களும் கெட்டுவிடும்.
- தேங்காய் பர்பி செய்யும்போது சர்க்கரையை பொடித்து சேர்த்தால் வெண்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
- பூந்தி செய்யும்போது ஜார்னியில் மாவை வாணலிக்கு அருகில் வைத்த தேய்த்தால் முத்து முத்தாக விழும்.
- முந்தரி பருப்பு போட வேண்டிய இடங்களில் எல்லாம் வேர்க்கடலையை பயன்படுத்தினால் சுவை வித்தியாசமாக இருப்பதோடு சத்தும் கூடும்.
- குடிக்கும் காபியில் கொஞ்சம் சுக்குப்பொடியைச் சேர்த்தால் சுவை வித்தியாசமாக இருப்பதோடு குளிர்காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது.
- புளிக்கு பதிலாக எலுமிச்சை பழச்சாற்றை பயன்படுத்தினால் புளியால் வரும் கெடுதல் நீங்கிவிடும்.
- அடை மீந்து போய்விட்டால் கொஞ்சம் கெட்டியாகி விடும். அதை தூர எரியாமல் விருப்பமான வடிவில் வெட்டி பஜ்ஜி மாவில் நனைத்து பஜ்ஜியாக எண்ணெயில் பொறித்து மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக தரலாம்.
- நறுக்கிய வெங்காய துண்டுகளை வானொலியில் சிறிது என்னை விட்டு வதக்கி பிறகு மாவில் தேய்த்து எடுத்தால் வெங்காய பஜ்ஜி கூடுதல் சுவையுடன் இருக்கும்.
- மிக்ஸியில் மாவு அரைக்கும் போது அது சூடாகிடாமல் தவிர்க்க மாவில் சிறிது ஐஸ் வாட்டர் கலந்து அரைக்கலாம்.
- அடைக்கு அரைக்கும் போது மிளகாய் வத்தல் போட்டு அறைத்து பின் ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டால் நல்ல வாசனையா இருக்கும்.
- பட்டாணி சுண்டலுக்கு வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.
- எந்த வகை சுண்டல் செய்தாலும் தனியா, வர மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தை தலா ரெண்டு ஸ்பூன் எடுத்து வறுத்து பின் இறுதியில் கசகசா விருப்பமெனில் சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து பொடித்து இந்த பொடியை தூவி இறக்கினால் மனம் ருசி அதிகரிக்கும்.
- சிறுதானிய அவல் கொண்டு மிக்சர் இனிப்பு உருண்டை செய்து வைத்துக் கொள்ள பசிக்கும்போது எல்லாம் கை கொடுக்கும்


