சாமை வெந்தய இட்லி
தேவையான பொருள்கள்
1.சாமை அரிசி -2 கப்
2.வெந்தயம் -4 ஸ்பூன்
3.உளுந்து -1/4 கப்
4.உப்பு -தேவையான அளவு

சாமை வெந்தய இட்லி செய்முறை
முதலில் சாமை அரிசியை இரண்டு அல்லது மூன்றுமுறை நல்ல தண்ணீரில் நன்றாக அலம்பிக் கொள்ளவும்.பின் சாமை அரிசியை தனியாக 4 முதல் 5 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தையும் வெந்தயத்தையும் 1/2 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
பின் சாமை அரிசியை சற்று கொரகொரவென அரைத்துக்கொள்ளவும். உளுந்தையும் வெந்தயத்தையும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து புசுபுசுவென்று வருமாறு அரைக்கவும்.
அரிசி மாவையும் உளுந்து மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாக கரைத்து வைக்கவும், 7-8 மணி நேரம் புளிக்க விடவும். அல்லது இரவு படுக்கும் முன் கரைத்து வைத்தால் காலை நன்றாக புளித்து மாவு பொங்கி இருக்கும்.
இட்லி பாத்திரத்தில் அடியில் தண்ணீர் விட்டு இட்லி தட்டில் மாவு விட்டு 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் சாமை வெந்தய இட்லி தயார்.
குறிப்பு :
இந்த மாவை சாதாரண இட்லி மாவை விட சற்று தண்ணீரில் கூட ஊற்றி சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் இட்லி சற்று கெட்டியாக இருக்கும்.








