சோள பொங்கல்
தேவையான பொருட்கள்
சோளம் – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4கப்
தாளிக்க:
மிளகு -1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
கருவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:
முதலில் சோளத்தை 6 மணி நேரம் ஊறவைத்து பின் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்துச் சூடானதும் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்.
பின் மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யும் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி தாளித்துப் பொரிந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பையும் அரைத்த சோளவிழுதையும் சேர்த்து கூடவே தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். வேக வைக்கவும். தண்ணீர் போதவிலையென்றால் தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.