“கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி” ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கன், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் மற்றும் இறுதிப் பகுதி வருமே மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் உலக அளவிலான ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஜேம்ஸ் கன்னிடம் இந்திய செய்தியாளர்கள் “கார்டியன்” பிரபஞ்சத்தில் ஓர் இந்திய நடிகரை அறிமுகப்படுத்த முடிந்தால் அது யாராக இருக்கும்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் RRR படத்திலிருந்து ஜூனியர் என்டிஆர் உடன் வேலை செய்ய விரும்புவதாகவும் அந்தப் படத்தில் அவர் அற்புதமாகவும், நேர்மறை தன்மையுடனும் இருந்தார் என்றும் தெரிவித்தார்.