சினிமா துளிகள்
- விடாமுயற்சி படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட வேலைகளை முடித்து தற்போது படப்பிடிப்பை தொடங்க ரெடியாகிவிட்டாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பூனேவில் நடக்க உள்ளது.அதற்கு அங்கு நடத்தப்பட உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள். இது குறித்து கேரள பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டு வரும் அஜித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், இதனை அடுத்து வரும் ஏழாம் தேதி நடத்தப்பட உள்ள படப்பிடிப்புக்காக அஜித் விரைவில் புனே சொல்வார் என்கிறது படக்குழு. முதற்கட்டமாக அஜித் நடிப்பில் உருவாகும் இந்த சண்டைக் காட்சி அஜித் ரசிகர்களுக்கு தரமான ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என்றும், இந்த படத்தில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம் என்கிறது படதரப்பு.
- ‘சென்னை-28′, சுப்பிரமணியபுரம்’, ‘சரோஜா’, ‘கோவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடிக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இதற்கிடையில் பெரிய நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கவும் தயார் என்கிறாராம் ஜெய். கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு வில்லனாக நடிக்கப்போகிறாராம். இவர் ஏற்கனவே ‘பட்டாம்பூச்சி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.
- உச்ச நடிகர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்க இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் இணைகிறார்கள். இப்படத்தின் உச்ச நடிகர் ரெட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல். இரட்டை வேடங்களில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி என்பதால் இந்த படத்திலும் அது தொடரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். படத்தில் அதிரடி சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்குமாம்.
- பிக்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் நிகில் சித்தார்த்தின் 20 வது படம் உருவாகி வருகிறது. பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நிகில் சித்தார்த்தாவின் பிறந்தநாளில் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய, ரவிபஸ்ரூர் இசையமைக்கிறார் வசனங்களை வாசுதேவ் முனீர்பகரி எழுதியுள்ளார்.
- எனக்கு பிடிக்காமலேயே ஒரு கேவலமான படத்தில் நடிக்க வேண்டி வந்தது. சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதாநாயகிகள் குறிப்பிட்ட படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அதற்கு பெரிய இயக்குனர் அல்லது ஹீரோ காரணமாக இருக்கலாம் என்று பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
- பரியேறும் பெருமாள் ,கர்ணன் ,மாமன்னன் படங்களை எடுக்கும் போது தேவர் மகன் படம் பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன்! அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் இசக்கி மாமன்னாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை என்று படத்தின் இயக்குனர் மாறி செல்வராஜ் கூறியுள்ளார்