மீண்டும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா

தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரியின் மகனும் நடிகர் ஜித்தன் ரமேஷின் தம்பியுமான ஜீவா தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் விரைவில் தயாரிக்கும் நூறாவது படத்தில் விஜய் நடிக்கிறார். இயக்குனர் முடிவாகவில்லை. இந்த நிலையில் ஜீவா தனியாக படம் தயாரிக்க ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளார். அதற்கு சூப்பர் குட் ஸ்டுடியோ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் சார்பில் ஜீவா தயாரித்து நடிக்கும் படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் இணைந்து பணியாற்றிய அவர்கள் தற்போது மீண்டும் இணைகின்றனர். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு ஜீவா நடிக்கும் படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. இதில் சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது என்று இயக்குனர் ராஜேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அவரது இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் வெப் தொடரின் சூட்டிங் முடித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top