மார்க் ஆண்டனி
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் “மார்க் ஆண்டனி” படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாக நடிகர் விஷால் திரையிட்டு காண்பித்துள்ளார். “மார்க் ஆண் டனி” படக்குழுவினருடன் இப்படத்தின் டீஸரை பார்த்து மகிழ்ந்த நடிகர் விஜய், மார்க்ஆண்டனி படக்குழு மற்றும் நடிகர் விஷாலை வெகுவாக பாராட் டினார். பிசியான படப்பிடிப்புக்கு இடையேயும் “மார்க் ஆண்டனி” டீசரை பார்த்து பாராட்டிய விஜய்க்கு விஷால் நன்றி கூற. “விடு நண்பா. ‘நண்பனுக் காக இதை கூட செய்யமாட்டேனா’ என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிகழ்வின் போது.

தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை “துப்பறிவா ளன் 2′ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால், அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் விஜய்க்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக கூற. “நீ வா நண்பா, நான் இருக்கிறேன். சேர்த்து பயணிப்போம்” என்று விஜய் கூறியது விஷாலுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளதாம்..இதையடுத்து இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சரியமில்லை என்கிறது படக்குழு.
இச்சந்திப்பின் போது “மார்க் ஆண்டனி திரைப்படத்தின் தயாரிப்பாளர் “மினி ஸ்டூடியோஸ் ” வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.