மாநாடு,மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நாகசைத்தன்யா நடிப்பில் கஸ்டடி படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்த மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசைக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் தற்போது துபாயில் இசைக்கோர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக வெங்கட் பிரபு யுவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் 10 ஆண்டுகளை திரையுலகில் கடந்ததற்கு கடவுளுக்கும், சாணுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து, இனிமேல்தான் சிறப்பான பல விஷயங்கள் வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப் புகைப்படத்தில் வெங்கட்பிரபு மிகவும் ஒல்லியாக தலைமுடி எல்லாம் கொட்டிப் போய் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்.வெங்கட்பிரபுவின் தோற்றம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பலரும் வெங்கட் பிரபுவுக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.