200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மனோபாலா மறைந்தார்

பிரபல நடிகரும் டைரக்டருமான மனோபாலா, சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் மனோபாலா நடித்துள்ளார். 40 திரைப் படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.

கோவை சூலூரில் 1953, டிசம்பர் 8 ந் தேதி பிறந்தவர். டைரக்டர் பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் படம் மூலம் உதவி இயக்குனராளார். பின் இணை துணை இயக்குனராகி டைரக்டராக உயர்ந்தார்.

மனோபாலா

அரண்மனை 3, டாண். துப்பாக்கி, சீமராஜா, கொன்றால் பாவம், நாய் சேகர், வால்டர் விரைய்யா, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கூகுள் குட்டப்பா, ஓ மை டாக், ரங்கா, முருங்கைகாய் சிப்ஸ், எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா உட்பட 200க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆகாய கங்கை, நான் உங்கள் ரசிகன், பிள்ளைநிலா, பாரு பாரு பட்டினம் பாரு, தூரத்துப் பச்சை. ஊர்க்காவலன், சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான். மூடு மந்திரம், மல்லுவேட்டி மைனர். வெற்றி படிகள். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். செண்பகத் தோட்டம். முற்றுகை. பாரம்பரியம். கருப்பு வெள்ளை, நந்தினி. அன்னை. சிறகுகள். நைனா ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் ‘ஆஞ்சியோ’ சிகிச்சை செய்யப்பட்டது. சிறிது காலம் ஓய்வில் இருந்தவர் மீண்டும். நடிக்க ஆரம்பித்தார். உடல் நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவு திரைப்பட உலகத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

மனோபாலா

நகைச்சுவையில் தனக்கென்று ஒரு தனிப்பாணியில் நடித்தவர். குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் பெயர் பெற்றிருக்கிறார்.மனோபாலாவின்மறைவுக்கு படவுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனோபாலாவின் குடும்பத்துக்கு ரூ நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜயகாந்தை வைத்து இவர் படங்கள் இயக்கி உள்ளார். 1987 ம் ஆண்டு மனோபாலா இயாகத்தில் சிறைப் பறவை திரைப்படம் வெளிவந்தது. பு”இப்படத்தில் விஜயாரந்த பாதிகா, செந்தில் மற்றும் மலேசியா தாகதேவன் நடித்திருந்தார்கள்.

.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top