நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி (பிறப்பு 25 ஆகஸ்ட் 1952), அவரது மேடைப் பெயரான விஜயகாந்த் மூலம் நன்கு அறியப்பட்டவர், அரசியல்வாதி மற்றும் முன்னாள் நடிகர் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனராக வெற்றி பெற்றவர் விஜயகாந்த்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அரசியல் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் முறையே விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

திரு.விஜயகாந்த் இதுவரை 156 படங்களில் நடித்து உள்ளார்.ரமணா, என் ஆசை மச்சான்,வானத்தை போல, வல்லரசு ,கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் முக்கியமானவை.தமிழக மக்களால் கருப்பு எம்ஜிஆர் என்று அன்போடு அழைக்கப்பெற்றார்.
கேப்டன் 2 முறை MLA ஆகவும், ஒருமுறை எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இவருக்கு பிரேமலதா என்கிற மனைவியும் , 2 மகன்களும் உள்ளனர்.
கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலகோளாறு காரணமாக கேப்டன் காலமானார்(71) கேப்டன் அவர்களின் நற்செயல்களை பாராட்டி மத்திய அரசு அவருக்கு “பத்மபூஷன்” விருது அறிவித்து பெருமை சேர்த்துள்ளது.