கொடூரமாக’ நடந்து கொண்ட இயக்குநர்!கதறி அழுத மாளவிகா மோகனன் !!


விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான்’ திரைப்படம்
இம்மாதம் 15-ம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்பட பலர் நடித்து உள்ளனர்.இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து இயக்குநர் பாரஞ்சித் கூறியுள்ளதாவது, “தங்கலான் படத்தை பொறுத்தளவு நான் சரியாக பிளான் செய்யவில்லை.ஆர்த்தி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் கரெக்ட்டா இருப்பார் என்று நினைத்தேன், அதே போல ‘லுக் டெஸ்டில்’ அமைந்தது.

மாளவிகா மோகனன்

ஷூட்டிங் போன பின்னர் தான் மாளவிகா மோகனனுக்கு ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது சிரமம் என்பது தெரிந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுதார். ஆனால், அவங்களோட இன்வால்வ்மெண்ட் ரொம்பவே பிடித்தது. நானும் ஏன் ரொம்பவே கொடூரமாக நடந்து கொண்டேன் தெரியவில்லை. அதன் பின்னர் மாளவிகா மோகன னுக்கு முறையான சிலம்பம் பயிற்சி கொடுத்து பிசிக்கலாக தேர்ச்சியான பிறகே படப்பிடிப்பை நடத்தினோம்.

அவரும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பா. ரஞ்சித்தின் வீடியோ பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top